Home » பாக்கெட் வெடிகுண்டாக மாறிய செல்போன் (Video)

பாக்கெட் வெடிகுண்டாக மாறிய செல்போன் (Video)

by newsteam
0 comments
பாக்கெட் வெடிகுண்டாக மாறிய செல்போன்

அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார்.
சார்ஜ் போடும்போது சூடாகி செல்போன்கள் வெடிப்பதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் எவ்வித பயன்பாடும் இன்றி சாதாரணமாக நம் ஆடையில் வைக்கப்பட்டிருக்கும்போது செல்போன் வெடிப்பது என்பது கொஞ்சம் அரிதாக நடக்கும் நிகழ்வு. அத்தகைய நிகழ்வு ஒன்று பிரேசிலில் நடந்துள்ளது.

காய்கறி சந்தைக்கு இளம்பெண் ஒருவர் தனது தோழருடன் சென்றிருந்தார். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட்டின் பின்பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தொடர்ந்து அவருடைய ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.இதனால் செய்தறியாமல் அவர் அங்கும் இங்கும் ஓடியபடி அலறி துடித்தார். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இதுதொடர்பான வீடியோ பதிவாகி இருந்தநிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாக்கெட் வெடிகுண்டாக மாறிய செல்போன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!