Site icon Taminews|Lankanews|Breackingnews

பாண் விற்பனையின் பெயரில் போதைப் பொருள் வியாபாரம் – 56 வயது நபர் கைது

பாண் விற்பனையின் பெயரில் போதைப் பொருள் வியாபாரம் – 56 வயது நபர் கைது

பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதன மோதக மாத்திரைகளை விற்பனை செய்தவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.56 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.லொறியொன்றில் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதற்கமைய நோட்டன் பிரிட்ஜ் ஊடாக குறித்த லொறி ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடம் இருந்து 250 மதனமோதக மாத்திரைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version