Friday, September 5, 2025
Homeஇலங்கைபாதாள உலகக் குழுவினர் கைது – நாமல் ராஜபக்ஷ கலவரம் குறித்து அமைச்சர் விளக்கம்

பாதாள உலகக் குழுவினர் கைது – நாமல் ராஜபக்ஷ கலவரம் குறித்து அமைச்சர் விளக்கம்

இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரணமாகக் கருத வேண்டாம்.

எமது குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இரு நாட்டு பொலிஸார், சர்வதேச பொலிஸ், இந்திய புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல தரப்பினரின் அர்ப்பணிப்பான சேவைக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த ஐவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதென்பது சாதாரண விடயமல்ல. இதனை விட பாரிய குற்றங்கள் தொடர்பில் அறிந்திருப்பதால் நாமல் ராஜபக்ஷவுக்கு இது சாதாரண விடயமாக இருக்கலாம். எனவே இது அவர்களுக்கு சிறிய விடயமாக இருந்தாலும் நாட்டுக்கு பெரிய விடயமாகும். அடுத்த கட்ட விசாரணைகளில் வெளியாகவிருக்கும் தகவல்களில் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்பட பலரது தகவல்களும் வெளியாகும்.

படிப்படியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கமைய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குற்றப்புலனாய்வு திணைக்களமும், பொலிஸாரும் மேலதிக தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவர்.சிலரது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் நாமல் எதற்காக இந்தளவுக்கு களவரமடைந்தார் என்பது எமக்கு தெரியும்.குற்றங்களுடன் தொடர்பற்ற எவரும் வீணாகக் கலவரமடையத் தேவையில்லை. மாறாக வேறு தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை பொலிஸாருக்கு வழங்குவது சிறந்ததாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  கொஸ்கொட துப்பாக்கிச் சூடு: 23 வயது இளைஞர் உயிரிழப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!