Site icon Taminews|Lankanews|Breackingnews

பிள்ளையானின் அரசியல் அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

பிள்ளையானின் அரசியல் அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

பிள்ளையானின் மட்டக்களப்பில் உள்ள அரசியல் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் நிலத்தடியில் இருந்து பல துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி மற்றும் விசேட அதிரடிப்படையினர் நேற்று (30) திடீர் சோதனை நடத்தினர்.கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

Exit mobile version