முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் சாரதியாகச் செயல்பட்ட ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.