புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி. அஜந்தன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மன்றில் முன்னிலையாகி இருந்த மீன் வியாபாரி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, வியாபாரியை கடுமையாக எச்சரித்த மன்று 10,000 ரூபாய் தண்டம் விதித்தது.