Home » புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சத்திரனின் பிறந்தநாள் நிகழ்வு

புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சத்திரனின் பிறந்தநாள் நிகழ்வு

by newsteam
0 comments
புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சத்திரனின் பிறந்தநாள் நிகழ்வு

புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனது 108வது பிறந்ததின நிகழ்வானது நேற்றையதினம் (27) பண்டத்தரிப்பு – சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை மற்றும் எம்.ஜி.ஆர் முன்னேற்றக்கழகம் ஆகியன இணைந்து இந்த பிறந்தநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்தார்.

விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவப்பட்டது.இதன்போது புற்றுநோய், சிறுநீரக நோய், பார்வை குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கல், விளையாட்டில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கல், சிறுவர்கள் – முதியோர்களுக்கு உதவிகள் வழங்கல் மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.இதில் யாழ். அரசாங்க அதிபர், அனைத்து எம்.ஜி.ஆர் பேரவையினர், எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகத்தினர், கிராம சேவகர், எம்.ஜி.ஆரின் இரசிகர்கள் மற்று பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!