ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் “பொடி லெசி” என்ற ஜனித் மதுசங்கவின் மாமியின் பெட்டகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரின் மனைவி நல்லாஹந்தி ஷ்யாமா குமுதுனியின் தாயாருக்குச் சொந்தமான அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 112 கிராம் தங்க நகைகளை நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.இந்த நகைகள் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.சந்தேக நபரான “பொடி லெசி” என்ற ஜனித் மதுசங்க மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு தற்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.