போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம் இந்தக் கொடுப்பனவுகளைச் செய்யலாம். இந்த திட்டம் குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான வீதியின் 11 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, இந்த மாதம் 30 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என்று வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார். பெப்ரவரி 7 ஆம் திகதி GovPay வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதனூடாக பொதுமக்கள் அனைத்து அரசாங்கக் கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் முறையில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.