Home » போலீஸ் அதிரடிப்படை, இராணும் இணைந்து குடத்தனையில் இரண்டு மணிநேரம் சுற்றிவளைப்பு

போலீஸ் அதிரடிப்படை, இராணும் இணைந்து குடத்தனையில் இரண்டு மணிநேரம் சுற்றிவளைப்பு

by newsteam
0 comments
போலீஸ் அதிரடிப்படை, இராணும் இணைந்து குடத்தனையில் இரண்டு மணிநேரம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் சுமார் இரண்டு மணிநேரம் மருதங்கேணி பொலீஸ் நிலைய பொறுப்பாதிகாரி தலமையிலான போலீஸார், இராணுவம், மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுப்ட்டனர். எனினும் எவரும் கைதுசெய்யப்படவில்லை.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அண்மைய சில நாட்களாக குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், இதனால் அங்கு இரண்டு
குழுக்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் இருவர் காயமடைந்திருந்தனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பன்னிரண்டு பேர் மருதங்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலையும் இருவர் கசிப்புடன் மருதங்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையிலேயே இன்று பிற்பகல் 5;30 மணியளவில் குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் இடம் பெற்றது.எனினும் குறித்த. சுற்றிவளைப்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை குறித்த வீதியால் சென்ற அனைவரது வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இராணுவத்தினரால் ஒளிப்பதிவும் செய்யப்பட்டனர்.அண்மைய நாட்களில் அம்பன் கிழக்கு மற்றும் கொட்டோடை பகுதியில் அதிகளவில் கசிப்பு உற்பத்திகள் இடம் பெற்று வருவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் இன்றைய சிற்றிவளைப்பு இடம் பெற்றிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் அதிரடிப்படை, இராணும் இணைந்து குடத்தனையில் இரண்டு மணிநேரம் சுற்றிவளைப்பு

You may also like

Leave a Comment

error: Content is protected !!