Home » மணல் அகழ்வு தொடர்பில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – OIC-க்கு விளக்கமறியல் நீட்டிப்பு

மணல் அகழ்வு தொடர்பில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – OIC-க்கு விளக்கமறியல் நீட்டிப்பு

by newsteam
0 comments
மணல் அகழ்வு தொடர்பில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – OIC-க்கு விளக்கமறியல் நீட்டிப்பு

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மணல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரிடம் மணல் அகழ்வு பணிகள் இடம்பெறும் இடங்களில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 47 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரிகளால் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!