பண்டாரகம, கலனிகம பகுதியில் மதுபோதையில், பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.பாணந்துறையில் – ஹொரணை தனியார் பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை போக்குவரத்து பொலிஸார் கலனிகம சந்திப்பில் தமது பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஹொரணையிலிருந்து வந்து கவனக்குறைவாக பல வாகனங்களை முந்திக்கொண்டு எதிர் திசையில் பயணித்த பேருந்தை நிறுத்தி, சாரதியை அழைத்தபோது அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.இதன்போது 40க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்ததாகவும் இந்த நிலைமை குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்களை வேறு பேருந்தில் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்