Site icon Taminews|Lankanews|Breackingnews

மத்திய சீனாவில் விடுதியில் மாணவி பெற்றெடுத்த குழந்தையின் எடையால் வைத்தியர்கள் அதிர்ச்சி

மத்திய சீனாவில் விடுதியில் மாணவி பெற்றெடுத்த குழந்தையின் எடையால் வைத்தியர்கள் அதிர்ச்சி

மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு 20 வயதான மாணவி, எதிர்பாராதவிதமாக தனது விடுதி அறையில் அதிக எடையுள்ள குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.4.5 கிலோ எடையுள்ள அந்த குழந்தையின் பிரசவம் இரவில் ஏற்பட்டுள்ளது. மாணவியின் அறைத் தோழி விழித்தெழுந்ததும் பார்த்ததும் மாணவியின் மேல் படுக்கை போர்வை முழுவதும் இரத்தத்தில் நனைந்திருந்தது என்றும், அந்த நேரத்தில் மாணவி வலியில் தவித்துக் கொண்டிருந்தார் என்றும் அறைத் தோழி தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக் குழு, குழந்தை பிறந்துவிட்டதைக் கண்டதும், அவசரமாக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருத்துவசிகிச்சை அளித்தனர்.மருத்தவர்கள், இந்த அளவுக்கு பெரிய குழந்தையை கண்டதும் , மாணவியின் உடல் நிலையைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Exit mobile version