தெற்கு திரிபுராவில் உள்ள பிர்சந்திரமனுவில் வசித்து வருபவர் நயன் சஹா வயது (33). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜுமா சஹாவை (27) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நயன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்ததால் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வார்.இந்த நிலையில், மனைவி ஜுமாவுக்கு பக்கத்து வீட்டுக்காரரான தீபங்கர் பானிக் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இதையறிந்த நயன் மனைவி ஜுமாவை கண்டித்துள்ளார். மேலும் இருவரையும் பலமுறை எச்சரித்துள்ளார். இருப்பினும், கள்ளக்காதலை ஜுமா கைவிடவில்லை.ஒருகட்டத்தில் வாழ்க்கையை வெறுத்த நயன் தனது மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி, கடந்த 21-ம் தேதி இருவரையும் வீட்டிற்கு அழைத்து சமரசம் பேசினார் நயன். இருப்பினும், மனைவி ஜூமா அங்கிருந்து கள்ளக்காதலனுடன் தப்பி ஓடினார். இதையடுத்து இருவரையும் கண்டுபிடித்த கணவர் நயன்… கிராம மக்கள் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஜூமாவிற்கும் கள்ளக்காதலன் தீபங்கருக்கும் திருமணம் செய்து வைத்தார்.மேலும் நயனும் ஜூமாவும் உள்ளூர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த விவகாரம் தற்போது சட்டப்பூர்வ பரிசீலனையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவியை கள்ளக்காதலனுக்கு கணவரே திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.