மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்திற்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகியுள்ளது.மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், உள்ளடங்களாக பல தரப்பினரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில், மன்னார் மாவட்ட அரச அதிபருக்குக் கையளிக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராக நிர்வாக முடக்கல் போராட்டம்
3