மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பன முழுமையாக நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என மன்னார் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காற்றாலை கோபுரங்களை அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று 17 ஆவது நாளை எட்டியுள்ளது.இந்நிலையில் இன்றைய நாள் போராட்டத்துக்கு, பனங்கட்டிக்கொட்டு, செல்வநகர், எமில் நகர், இத்திக்கண்டல், தலைமன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.