Site icon Taminews|Lankanews|Breackingnews

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்துக்கு இன்று (30) எடுத்துச்செல்லப்பட்டது.கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் என்பவரின் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து, கொடிச்சீலை திருக்கேதீச்சர ஆலயத்துக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை சனிக்கிழமை (31) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.1982ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்த நிலையில், யுத்த காலத்தில் இந்த முறை கைவிடப்பட்டிருந்தது.2022ஆம் ஆண்டு திருக்கேதீச்சரம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் 3ஆவது முறையாக இந்த ஆண்டு கொடிச்சீலை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version