கம்பஹா – சபுகஸ்கந்த மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திலிருந்து தப்பியோடிய 15 சிறுவர்களில் ஐவர் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நிலையத்திலிருந்து தப்பியோடிய 15 சிறுவர்களில், 4 சிறுவர்களைத் தவிர, மீதி 11 சிறுவர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.தப்பியோடியவர்களில் இருவர், ஏற்கனவே குறித்த நிலையத்திலிருந்து தப்பிச் சென்று பின்னர், நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தப்பியோடியவர்கள் 15 முதல் 17 வயதுக்குபட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மாகொல சிறுவர் தடுப்பு மையத்திலிருந்து தப்பிய 15 பேரில் 5 பேர் கைது
4