மாங்குளத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த நபர் அயலவர்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று(1) இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடபில் மேஎலும் தெரியவருகையில்,பெண்கள் வீட்டில் தனித்திருக்கையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த அறிமுகம் இல்லாத நபர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித் நிலையில் கூக்குரல் எழுப்பியுள்ளர். அவர்களின் சத்தம்கேட்டு அயலவர்கள் ஓடிச்சென்று சந்தேக நபரை பிடித்து கட்டியுள்ளனர்.அதோடு சந்தேக நபரி உடமியில் கத்திகளும் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவம் இடத்துக்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வீட்டில் ஆண்கள் யாரும் இருக்காத நிலையில் நிகழ்ந்த இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் (மனைவியின் தாய் மற்றும் தங்கை இருவர் )மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.கைதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணையில் கூறியுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.