Home » மாவாடிப்பள்ளி பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை

மாவாடிப்பள்ளி பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை

by newsteam
0 comments
மாவாடிப்பள்ளி பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை

மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையைச் சேர்ந்த 86.8% மாணவர்கள் சித்தியடைந்து சாதனையை படைத்துள்ளனர்.

1.JM Arman Salik 165
2.MR Naif Sahan 149
3.RM.Aqshath 140

இம் மாணவர்களின் இவ்வெற்றிக்கு பங்களிப்புச் செய்த ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான பகுதித் தலைவர், பாடசாலையின் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள், ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர்,வலயக் கல்விப் பணிப்பாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்,பிரதிக் கல்வி பணிப்பாளர்கள்,மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட பெரும் நெருக்கடிக்கு மத்தியில்தான் மாணவர்கள் கல்வியை கற்றனர். அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுத்த ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்ததை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
எமது சமூகத்தின் விடிவு கல்வியில் தான் தங்கியுள்ளது . ஆர்வத்துடன் புலமைப் பரிசில் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற்றது போல் ,சாதாரண தரப் பரீட்சையில் , உயர்தரத்திலும் சிறந்த முறையில் பெறுபேறுகளை பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயம் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன். தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மாவாடிப்பள்ளி பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில்  சாதனை
மாவாடிப்பள்ளி பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில்  சாதனை
மாவாடிப்பள்ளி பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில்  சாதனை

You may also like

Leave a Comment

error: Content is protected !!