நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் “தளபதி 69” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படத்திற்கு `ஜன நாயகன்’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ஒரு அரசியல் பின்னணி கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.முன்னதாக நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் பலமுறை வாகனத்தின் மீது நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளார். அந்த வகையில் தனது அடுத்த படத்தின் முதல் தோற்றத்திலேயே தன் நிஜ வாழ்க்கை சம்பவத்தை ரீகிரியேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discover more from Taminews|Lankanews|Breackingnews
Subscribe to get the latest posts sent to your email.