Home » மின்சாரக் கட்டண மாற்றம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

மின்சாரக் கட்டண மாற்றம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

by newsteam
0 comments
மின்சாரக் கட்டண மாற்றம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை , நிதியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை வௌியிட்ட நிலையில், நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க தீர்மானித்திருந்தது .அதன்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார அலகுகளில் , 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடைப்பட்ட அலகுகளுக்கான கட்டணம் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கத் தீர்மானித்திருந்தது.

மேலும் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான அறிக்கை நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டு, அதில் எரிசக்தி அமைச்சின் ஊடகச் செயலாளர் கையொப்பமிட்டார்.பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகளை அதிகாரப்பூர்வமாகப் பெற்ற பிறகு, நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!