Site icon Taminews|Lankanews|Breackingnews

மீண்டும் உயர்ந்த தங்க விலை – இன்று மேலும் ரூ.10,000 உயர்வு

மீண்டும் உயர்ந்த தங்க விலை – இன்று மேலும் ரூ.10,000 உயர்வு

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் பவுண் தங்கத்தின் விலை 390,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.இது நேற்றைய நாளில் 380,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 360,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.இது நேற்றைய நாளில் 351,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version