Home » முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம்

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம்

by newsteam
0 comments
முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம்

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்தார்.பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.கடந்த வாரம் அதிகாலை 2 மணியளவில் குறித்த மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து இவ்வாறு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களுள் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களுள் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!