Home » முதியவர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி

முதியவர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி

by newsteam
0 comments
முதியவர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி

யாழ், வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பலொன்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகைப் பணத்தினை திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த மோசடிக் கும்பல் உடுத்துறை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனியார் தொலைத்தொடர்பு சேவை ஒன்றின் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி அவரது தொலைபேசி இலக்கத்திற்கு வந்த வங்கியின் கடவுச்சொற்களை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து 2 இலட்ச ரூபாய் பணத்தினைத் திருடியுள்ளனர்.

அதேபோன்று முதியவர் ஒருவரிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு அவருக்கும் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி அவரது வங்கி தகவல்களை பெற்றதுடன், வங்கியில் இருந்து தொலைபேசிக்கு வந்த கடவுச்சொற்களையும் பெற்று அவரின் வங்கி கணக்கில் இருந்து 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தினை களவாடியுள்ளதாகத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

You may also like

Leave a Comment

error: Content is protected !!