Home » முன்னால் சென்ற ரீப்பர் மீது மோதிய மோட்டார் சைக்கிள், இளைஞன் உயிரிழப்பு

முன்னால் சென்ற ரீப்பர் மீது மோதிய மோட்டார் சைக்கிள், இளைஞன் உயிரிழப்பு

by newsteam
0 comments
முன்னால் சென்ற ரீப்பர் மீது மோதிய மோட்டார் சைக்கிள், இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(11) இரவு 8:50 மணியளவில் இடம் பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கல் ஏற்றிவந்த ரிப்பர் ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ரிப்பர் மீது மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருவதுடன் ரீப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்றம் நடவடிக்கைக்காக மருதங்கேணி போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு நோயாளர் காவு வண்டிமூலம் கொண்டு செல்லப்பட்டபோது மரணமடைந்துள்ளார். சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!