Home » முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் புதிய பெயர் பலகை அமைப்புக்கு நீதிமன்ற தடை

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் புதிய பெயர் பலகை அமைப்புக்கு நீதிமன்ற தடை

by newsteam
0 comments
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் புதிய பெயர் பலகை அமைப்புக்கு நீதிமன்ற தடை

முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உட்பட தொல்லியல் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் புதிய பெயர் பலகை எதனையும் நிறுவக் கூடாது என நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொக்கிளாய் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, முல்லைத்தீவு நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று முன்தினம் முதல் இடம்பெற்று வருகின்றது.இந்தநிலையில், உற்சவத்தின் இறுதியில் புதிய பெயர் பலகை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த செயற்பாடு அந்த பகுதியில் வேறு மத வழிபாடுகளை மேற்கொள்கின்றவர்களுடன் முறுகல் நிலையினை உருவாக்கும் என்றும், அதனால், அமைதியின்மை ஏற்படும் என்றும் பொலிஸார் மன்றுரைத்துள்ளனர்.எனவே, அங்குப் புதிய பெயர் பலகை நிறுவுவதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பிப்பிக்குமாறு கொக்கிளாய் காவல்துறை விடுத்த கோரிக்கைக்கு அமைய, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.இதன்படி, நேற்றிலிருந்து 14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!