Home » முல்லைத்தீவு பாடசாலையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்

முல்லைத்தீவு பாடசாலையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்

by newsteam
0 comments
முல்லைத்தீவு பாடசாலையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்

முல்லைத்தீவு பாடசாலையில் குளவிகள் துரத்தி துரத்தில் கொட்டியதால் ஆசிரியர்கள் , மாணவர்கள் தலை தெறிக்க ஓடிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி தேன் குளவிகள் கொட்டியுள்ளது.ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றையதினம் (30) வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற இருந்தது.இந்நிலையில் திடீரென தேன் குளவிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொட்டியுள்ளது.இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர். இப்பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக தேன் குளவிகள் கூடுகட்டி வாழ்வதாக கூறப்படுகிற நிலையில் மாணவர்கள் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!