Home » யாழில் ஆலய கும்பாபிஷேகத்தில் தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் கைது

யாழில் ஆலய கும்பாபிஷேகத்தில் தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் கைது

by newsteam
0 comments
யாழில் ஆலய கும்பாபிஷேகத்தில் தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் கைது

யாழில் ஆலய கும்பாபிஷேகத்தில் தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைதான நான்கு பெண்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. அதன் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.கும்பாபிஷேக வேளை தாலிக்கொடி ஒன்று உள்ளிட்ட ஐவரின் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறிந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு , சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆலய சூழலில் நடமாடிய வட மேல் மாகாணத்தை சேர்ந்த நான்கு பெண்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அவர்களை நேற்றைய தினம் (8) யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!