யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இன்று காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.இன்று அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு சென்ற வேளை இடைவழியில் மறித்த இனம்தெரியாத கும்பல் கடை உரிமையாளர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.குறித்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்த இனந்தெரியாதோர் கடைக்குச் சென்றவரை இடையில் வழிமறித்து பொல்லுகளால் கடுமையாக தலை, கை என்பவற்றில் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.தாக்குதல் நடாத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தை துணியால் கட்டி மறைத்திருந்ததாக தெரியவருகிறது.தாக்குதலுக்குள்ளானவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றினை நடாத்திவரும் சின்னையா ஆலாலசுந்தரம் (54) வயதுடையவரே இவ்வாறு பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் காயம்
By newsteam
0
15
RELATED ARTICLES