Home » யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை உயிரிழப்பு

by newsteam
0 comments
யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே இன்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 22ஆம் திகதி குழந்தைக்கு சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டது.இந்நிலையில் மந்திகை வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.இருப்பினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!