யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டார்.இதனையடுத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து வந்து 17 நாட்கள் விடுதியொன்றில் தங்க வைத்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.அதேவேளை, விடுதியின் உரிமையாளரும், குறித்த சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனைக் கைதுசெய்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.