Home » யாழில் திருடுவதற்காகவே வீடு வாடகைக்கு எடுத்த இளைஞன் – தாலிக்கொடி, பணம் மாயம்

யாழில் திருடுவதற்காகவே வீடு வாடகைக்கு எடுத்த இளைஞன் – தாலிக்கொடி, பணம் மாயம்

by newsteam
0 comments
யாழில் திருடுவதற்காகவே வீடு வாடகைக்கு எடுத்த இளைஞன் – தாலிக்கொடி, பணம் மாயம்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 7 பவுண் தாலிக்கொடி மற்றும் 3 இலட்சம் ரூபா பணம் என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை இன்று கைது செய்தனர்.குறித்த நபர், வாடகைக்கு ஒரு வீட்டினை எடுத்து தங்கி நின்று, தான் திருடவுள்ள வீட்டை முழுமையாக நோட்டமிட்ட பின்னர் அந்த வீட்டை விட்டு வெளியேறி, சில நாட்களின் பின்னர் திருட்டில் ஈடுபட்டு வந்த விடயம் அம்பலமாகியுள்ளது.இது அவரது வழமையான செயற்பாடு என தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!