Site icon Taminews|Lankanews|Breackingnews

யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு கிருமி தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு கிருமி தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.ஆதித்தியன் கிருஷாளினி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தைக்கு கடந்த முதலாம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சிகிச்சைக்காக குறித்த குழந்தையை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.இருப்பினும் குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளது.குழந்தையின் சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version