யாழ்ப்பாணம் – முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளது.
48 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் நேற்று இரவு குழுவாக இருந்து மதுபானம் அருந்தியதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.