Home » யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2025

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2025

by newsteam
0 comments
யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு - 2025

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (14.02.2025) யாழ். மத்திய கல்லூரிவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் ,சமூக சேவைகள்,கூட்டுறவு ,உணவு வழங்கலும் விநியோகமும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தகமும் வாணிபமும் மாகாண அமைச்சின் செயலாளர் திரு .பொ. வாகீசன்,அவர்களும் சிறப்பு விருந்தினராக FAIRMED செயற்றிட்ட தலைவர் திருமதி.ஞானரதன் பிரியரஜினி,அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் இத் தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது. 7 வகையான மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 87 வகையான விளையாட்டுக்கள் நடைபெற்றன.இவ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கானமாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு மேலும் இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு - 2025
யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு - 2025

You may also like

Leave a Comment

error: Content is protected !!