37
யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் மீன்களும் சேர்ந்து வீழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது.இன்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் வீழ்ந்தன.மழையுடன் வீழ்ந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.