Home » யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் டிப்பர் விபத்தில் மூதாட்டியொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் டிப்பர் விபத்தில் மூதாட்டியொருவர் உயிரிழப்பு

by newsteam
0 comments
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் டிப்பர் விபத்தில் மூதாட்டியொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில், சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) என்ற மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.33 வயதுடைய டிப்பர் சாரதி கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!