யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்று (22) கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைதான சந்தேக நபர்களிடம் இருந்து 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.அதற்கமைய, சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
