யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார்.இதன் படி நெடுந்தீவிலுள்ள 8 பாடசாலைகளில் 6 பாடசாலைகளும், அனலைதீவிலுள்ள 3 பாடசாலைகளும், எழுவைதீவிலுள்ள 2 பாடசாலைகளில் ஒரு பாடசாலையும் அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அதிபர்களால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.ஏற்கனவே அந்தப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வருவதற்கு பின்னடிக்கும் நிலைமை காணப்படுகின்றது எனவும் அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்பட்டு அந்தக் கொடுப்பனவும் கிடைக்காமல் போனால் நிலைமை இன்னமும் மோசமாகும் என்றும் அதிபர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
யாழ். கடல் கடந்த தீவுப் பாடசாலைகள் “அதிகஷ்டப் பிரதேச” பட்டியலில் இருந்து நீக்கம் – அதிபர்கள் கவலை
