Wednesday, April 16, 2025
Homeஇந்தியா'ரீல்ஸ்' வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு

‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா பகுதியில் 3 வாலிபர்கள் வசித்து வந்தனர். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலன் (வயது 24), ராகுல்(18), பிகேஷ்(20) ஆகிய 3 பேர் ஆவர். இவர்கள் 3 பேரும் தொட்டபள்ளாப்புராவில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்கள்.நேற்று மாலை வேலை முடிந்ததும் நிறுவனத்தில் இருந்து 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். தொட்டபள்ளாப்புரா சித்தேநாயக்கனஹள்ளி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்த 3 பேரும், அங்கு ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று 3 பேர் மீதும் மோதியது.இதில் லலன், ராகுல், பிகேஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து 3 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:  காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெறவேண்டியது அவசியம் - சிவஞானம் வலுயுறுத்து
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!