Site icon Taminews|Lankanews|Breackingnews

லொறியொன்று வீதியை விட்டு விலகி ரயில் தண்டவாளத்தில் பயணித்த லொறி

லொறியொன்று வீதியை விட்டு விலகி ரயில் தண்டவாளத்தில் பயணித்த லொறி

லொறியொன்று வீதியை விட்டு விலகி ரயில் தண்டவாளத்திற்கு பாய்ந்ததில் மலையக ரயில் பாதையில் பதுளை-கொழும்பு ரயில் சேவை நேற்று (03) பாதிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியில் கொலதென்ன ரயில் கடவைக்கு அருகில் வைத்து ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக ஓட்டுநர் ரயில் தண்டவாளத்தில் ஏற்றி ​லொறியை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.விபத்தில் லொறி சேதமடைந்துள்ளதுடன் , ஓட்டுநர் காயமின்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன் காரணமாக, காலை 5.55 மணிக்கு கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில், தியத்தலாவ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் பதுளைக்கும் கொழும்பு புறகோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தாமதமாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version