உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனாவாகும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது. அதில் ஒன்று ஒரு தம்பதி ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது. இதனால் சீனத் தம்பதிகள் பெரும்பாலான ஆண் குழந்தைகளை விரும்பினர். இதனால் பெண்கள் பிறப்பு விகிதம் குறைய ஆரம்பித்தது. தற்போது ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தை திரும்ப பெற்றுள்ளது.இந்த சட்டத்தின் காரணமாக சீனாவைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி 3 கோடிக்கும் அதிகமான சீன ஆண்கள் மணப்பெண் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களை எஞ்சியிருக்கும் ஆண்கள் என குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வெளிநாட்டு மனைவிகளை தேடும் நிலைக்கு ஆண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை பயன்படுத்தி பெண்களை திருமணம் செய்து வைக்கும் வேலையில் மோசடிக் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
வணிக எல்லைத் தாண்டிய திருமண ஏஜென்சிஸ், எல்லைத்தாண்டிய டேட்டிங் வீடியோக்களை பரப்பும் சமூக வலைத்தளங்கள் போன்றவை இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களிடம் சிக்காமல் இருப்பதை வலியுறுத்தி, வெளிநாட்டு மனைவிகளை வாங்கும் யோசனையை கைவிட வேண்டும். வங்கதேசத்தில் திருமணம் செய்வதற்கு முன்னதாக பலமுறை யோசிக்க வேண்டும். ஒருவேளை மோசடியில் ஈடுபட்டால், அந்நாட்டின் தற்போதைய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியவடைய அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வாழ்க்கை பாதிக்கப்படும் என வங்கதேசத்தில் உள்ள சீன தூதகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மோசடி கும்பலிடம் சிக்கி பணம் மற்றும் வாழ்க்கையை இழக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இந்த மோசடி கும்பல் நல்ல வேலை வாங்கி தருவதாக சீனாவுக்கு வங்கதேச பெண்களை அனுப்பி வைக்கிறார்கள். பின்னர் வலுக்கட்டாயமாக அங்குள்ள இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இதுபோன்ற செயல் ஆள்கடத்தல் மோசடியாக கருதப்படுகிறது.
இதுபோன்ற செயல்களில் மாட்டிக்கொண்டால் வங்கதேசததில் குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படும். சீனாவும் இந்த எல்லைத்தாண்டிய திருமண ஏஜென்சி செயல்களை அனுமதிப்பதில்லை.