Home » வட்டுக்கோட்டையில் தனியாக வசித்து வந்த வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை

வட்டுக்கோட்டையில் தனியாக வசித்து வந்த வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை

by newsteam
0 comments
வட்டுக்கோட்டையில் தனியாக வசித்து வந்த வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை

இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருவதாகவும், விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில் உண்மையறியாத அந்த வயோதிபப் பெண் 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். தான் ஏமாற்றப்பட்ட விடயம் பின்னர் தெரியவந்த நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!