Site icon Taminews|Lankanews|Breackingnews

வட மாகாணத்தில் தீபாவளி நாளில் மதுபான விற்பனை தடை – ஆளுநரின் தீர்மானம்

வட மாகாணத்தில் தீபாவளி நாளில் மதுபான விற்பனை தடை – ஆளுநரின் தீர்மானம்

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தீபாவளி தினத்தன்று மதுபான சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version