குருநாகல், பரகஹதெனிய – சிங்கபுர பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசுவை, தாயார் பொறுப்பேற்க முன்வந்தால் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தயார் என அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். கைவிடப்பட்ட குழந்தையின் தாயைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.முன்னதாக குருநாகல் – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வயல்வெளி ஒன்றில் பெண் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாவதகம காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த குழந்தை தொடர்பிலேயே அமைச்சர் சாவித்திரி போல் ராஜின் அறிவிப்பு வெளியாகியுள்ளது