Home » வரலாற்றில் முதன் முறையாக வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை

வரலாற்றில் முதன் முறையாக வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை

by newsteam
0 comments
வரலாற்றில் முதன் முறையாக வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள் ஓபின் இன்டர்நசினல் சிலம்பம் போட்டியில் இந்திய அணியுடன் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் நோர்வேயில் வசிக்கும் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா அவர்களால் கெளரவிக்கப்படவுள்ளனர்.7.02.2025 மற்றும் 8.02.2025 ம் திகதிகளில் நுவரெலியா municipal council indoor stadium இல் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான சிலம்பம் போட்டிகளில் பங்குபெற்றி வடமராட்சி கிழக்கில் முதன்முறையாக வெற்றி பெற்றமைக்காக பங்குபற்றிய மாணவர்களையும்,அதனை பயிற்றுவித்த ஆசிரியரான யாழ் மாவட்ட கராத்தே சங்க தலைவரும்,கல்வி நிலையத்தின் கராத்தே,சிலம்ப பயிற்றுவிப்பாளருமான க.கமலேந்திரன் அவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 15.02.2025 கல்வி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.கெளரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிர்வாக இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா(விஜயன்)மற்றும் பதில் நிர்வாக இயக்குனர் ராஜீதரன் -சுனீதா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வரலாற்றில் முதன் முறையாக வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று  மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை
வரலாற்றில் முதன் முறையாக வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று  மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை

You may also like

Leave a Comment

error: Content is protected !!