Home » வரும் பாரராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: ஜஸ்டின் ட்ரூடோ

வரும் பாரராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: ஜஸ்டின் ட்ரூடோ

by newsteam
0 comments
வரும் பாரராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: ஜஸ்டின் ட்ரூடோ

விரைவில் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றார் ஜஸ்டின் ட்ரூடோ.
அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்வது என இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.கனடா பிரதமர் ஆக இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. எதிர்ப்பு காரணமாக கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்த அவர், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிப்பேன் என தெரிவித்திருந்தார். கட்சி விதிப்படி, தலைவராக இருப்பவரே பிரதமர் ஆக பதவி ஏற்கமுடியும். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு எடுத்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அடுத்து என்ன செய்வது என முடிவு செய்யவில்லை. அதற்கு நேரமும் இல்லை. தற்போது கனடா மக்கள் அளித்த பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!