Home » வவுனியாவில் உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் : ஒருவர் கைது

வவுனியாவில் உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் : ஒருவர் கைது

by newsteam
0 comments
வவுனியாவில் உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் : ஒருவர் கைது

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (03) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர். இதன்போது அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அங்கு வந்த வவுனியா பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!