Home » வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

by newsteam
0 comments
வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!